தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆதலினால் காதல் செய்வீர் என்ற இணைய தொடருக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். ஹே நண்பா என்று தொடங்கும் இந்த பாடலை பாடியதற்காக தனக்கு கிடைத்து சம்பளம் முழுவதையும், தனது கல்லூரிப் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்த முதுகலை மாணவி ஒருவரின் படிப்புக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளார். இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது.
Categories