Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கால் நேர்ந்த விபரீதம்… குழந்தைகளின் முக்கிய உறுப்பு பாதிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களது நேரங்களை கணினி மற்றும் செல்போன்களில் அதிக அளவில் செலவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு குறுகிய பார்வை அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஹாங்காங்கில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு முன்பு 6 வயது குழந்தைகளில் 17 சதவீதமாக இருந்த குறுகிய பார்வை கொரோனா ஊரடங்கு காரணமாக 28 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

அதேபோல் 8 வயது குழந்தைகளுக்கு 15 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாகவும், 7 வயது குழந்தைகளுக்கு 16 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகவும் குறுகிய பார்வை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகள் எப்போதும் போல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுடைய குறுகிய பார்வையானது பாதிக்காமல் இருக்கும் என்று முந்தைய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

Categories

Tech |