காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்ததாக முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட அறிக்கையில், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறை செயலாளரே 11 விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தேன்.
ஆனால் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அதிமுக அரசு அந்த வாக்கி டாக்கி விவகாரத்தை மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக தற்போது 350 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த ஊழல் வழக்கையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சுதந்திரமாக விசாரணை நடத்தி, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும்! என்று கேட்டுக்கொண்டுள்ளார். ட்விட்டரில் முழு விவரத்தையும் ஸ்டாலின் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழல் வழக்கையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை சுதந்திரமாக விசாரணை நடத்தி, ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும்! pic.twitter.com/UFDUeSFXpu
— M.K.Stalin (@mkstalin) September 29, 2019