கார் புளிய மரத்தின் மீது மோதியதில் வடமாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கோபிநாத் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் ராகுல்வர்மா, சிவா, ஹரிபிரசாத் ஆகிய 4 பேரும் பொள்ளாச்சியில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் நால்வரும் திருச்செங்கோடு பகுதியில் வேலையை முடித்துவிட்டு பொள்ளாச்சிக்கு காரில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதி அருகே நிலைதடுமாறிய காரானது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது பலமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராகுல் வர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராகுல் ஒரு மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த சிவா, கோபிநாத், ஹரி பிரசாத் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.