Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்… Covid-19 தடுப்பூசி விலை அதிகரிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் Covid-19 தடுப்பூசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடுப்பு மருந்தை வாங்க moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 15.50 யூரோவாக இருந்த நிலையில் புதிய விலைப்படி 19.50 யூரோவாக அதிகரித்துள்ளது. அதேபோல் மாடர்னா தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 19 யூரோவாக இருந்த நிலையில் புதிய விலைப்படி 21.50 யூரோவாக அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் ஐரோப்பிய ஒன்றியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியவர்களில் 70 விழுக்காட்டினருக்கு கோடை காலம் முடிவதற்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் ஒரு பில்லியன் மக்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான மருந்துகளை பெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |