வயலின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் வீட்டு மனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வேறுவழியில் வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்துள்ளனர். இந்நிலையில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் மனுக்களை அவர்கள் போட்டுள்ளனர். இதனை அடுத்து இம்மாவட்டத்திலுள்ள மத்திமரத்துபட்டி பகுதியில் விவசாயியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கல்லினா என்ற மனைவி உள்ளார். அதன் பின் கல்லினா கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தன் பையில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரின் அருகில் சென்று பெட்ரோல் வைத்திருந்த பாட்டிலை வாங்கிக்கொண்டு தீ குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. பின்னர் கல்லினா கூறும் போது தங்களின் விவசாய நிலத்தின் அருகில் தனியார் வீட்டு மனைகள் போடப்பட்டுள்ளது. அதனால் மழை காலங்களில் அந்த வீட்டு மனைகளில் இருந்து வெளியேறும் நீர் தங்களின் விவசாய நிலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் மண்ணில் அரிப்பு ஏற்பட்டு பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றது. இதனை அடுத்து மழைநீரை வேறு வழியில் வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகளை அதிகாரியிடம் மனு மூலம் தெரிவித்தோம். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தீக்குளிக்க முயன்றேன் என காவல்துறையினரிடம் அவர் கூறியுள்ளார்.