Categories
தேசிய செய்திகள்

கல்விக் கடன் வேணுமா….? “குறைந்த வட்டியில் ரூ.1 லட்சம் முதல் 1 கோடி வரை கடன்”… பேங்குக்கு கூட போகத் தேவையில்லை…!!!

குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நாம் சேருகின்றோம். ஆனால் கல்விக்கான செலவு அதிகமாக இருப்பதால் பலர் தங்களது விருப்பமான படிப்பை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தினால் பல மாணவர்கள் பிடித்த படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைப்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

கல்விக் கடனுக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்கிவருகின்றது. ஒரு கோடி வரையில் கல்வி கடனை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் டிஜிட்டல் முறையில் கிடைப்பது என்பது கூடுதல் அம்சம். அதாவது கடன் வாங்க வங்கி செல்ல தேவையில்லை. ஆன்லைனிலேயே எல்லாத்தையும் செய்துவிடலாம்.

இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் இணைந்து படிப்பதற்கும் இந்த வங்கியில் கடன் பெறலாம். கல்வி கடனுக்கு முழு வட்டிக்கும் வருமானவரி பிரிவு 80E மூலமாக சலுகை கிடைக்கின்றது. ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை கடன் வாங்கிக் கொள்ள முடியும். கடனுக்கான வட்டி விகிதம் 9.5 சதவீதத்தில் இருந்து தொடங்குகின்றது. ஐசிஐசிஐ வங்கியின் இன்டர்நெட் பகுதியில் சென்று இந்த கடனுக்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |