Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா கட்டிக்கொடுங்க… நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பழைய ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டி தருமாறு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரத்தில் ரேசன்கடை ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் ரெங்கநாதபுரம், வடக்கு தெரு, தெற்கு தெரு, எக்கல், சோத்திரியம், கண்டகரயம் போன்ற பகுதிகளில் உள்ள 580 குடும்ப அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் அந்த ரேசன்கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த ஒரு ஆண்டிக்கு முன்பு மூடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குளி கட்டிடத்தில் ரேசன்கடை செயல்பட்டு வருகின்றது. ஆனால் அந்த இடம் மிகவும் குறுகிய இடத்தில் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பழைய ரேஷன் கடையை இடித்து புதிய ரேசன்கடை கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் பல்வேறு முறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புதிய ரேசன்கடையை கட்டித்தரவேண்டும் என வலியுறுத்தி பழைய ரேசன்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |