Categories
உலக செய்திகள்

“சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு!”.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரிப்பு..!!

சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது.

சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி உயிரிழந்தவர்களில் 14 நபர்கள் சுரங்க ரயில் பயணிகள் ஆவர். மேலும் ஹெனான் மாகாணத்தில் வாழ்ந்துவரும் 3.76 லட்சம் மக்கள் பத்திரமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |