Categories
தேசிய செய்திகள்

“ஐ.நாவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது”….130 கோடி இந்தியர்கள் தான் காரணம்… பிரதமர் மோடி பெருமிதம்..!!

ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்று டெல்லியில் பிரதமர் மோடி  பெருமையுடன் பேசினார்.  

பிரதமர் மோடி நேற்று  அமெரிக்காவின் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றினார். அப்போது அவர்,  தமிழ் கவிஞர்  கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். மேலும் இந்தியா கொண்டு வந்த திட்டத்தையும் புகழ்ந்து கூறினார். பல கருத்துக்களையும் பேசினார். ஆனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில்   உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்து மோடியை வரவேற்றனர்.  அதைத்தொடர்ந்து  பிரதமர் மோடி  விமான நிலைய வளாகத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.  ஐநாவில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்றும் பெருமையுடன் பேசினார்.

Categories

Tech |