இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் தலைவர் மு கருணாநிதி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார்.
அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தனது உரையை தமிழில் ஆற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் மு கருணாநிதி என்று கூறினார். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள். புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி என மகாகவி பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.