Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாத்தி கம்மிங் ஒத்து’… விஜய் போல் நடனமாடும் பிரபல கிரிக்கெட் வீரர்… கலக்கலான வீடியோ…!!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. மேலும் இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டேவிட் வார்னர் டிவியில் வாத்தி கம்மிங் பாடலை பார்த்துக் கொண்டே விஜய் போல நடனமாடுகிறார். மேலும் இதற்கு கேப்ஷனாக ‘இன்று போர் அடிக்குது. இந்த நடனத்தைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |