Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் வீதத்தை குறைத்த பிரபல நாடு…. மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா….!!

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்துள்ளதால் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே 48 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 4 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்துள்ளதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் அதிகமாக டெல்டா வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரத்தில் புதிதாக 4,998 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மூன்று பேர் என்பதால் பெரிய அளவில் சந்தோசத்தை அளித்துள்ளது. மேலும் தடுப்பூசியால் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Categories

Tech |