ரஷ்யாவில் மக்கள் பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்துகொண்டு படகில் நின்றவாறு பயணிக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வருடந்தோறும் ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினமும் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கதைகளில் வரும் வேடங்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் போல பல வண்ணங்களில் கண்களைக் கவரக்கூடிய ஆடைகளுடன் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் படகில் நின்றவாறு ஓட்டிச்சென்று நகரத்தை சுற்றி வந்தனர். மேலும் அங்கு கொரோனா விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தான் போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் 75 நபர்களுக்கு மேல் பங்கேற்க முடியாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.