தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கில் சிறப்பு பூஜை செய்வதும் அதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அந்த பூஜை நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி பெருக்கும், அமாவாசையும் ஒன்றாக வருவதால் அந்த பூஜையில் கலந்து கொள்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஆடிப்பெருக்கில் ஏராளமான பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை முத்தாரம்மன் கோவிலுக்குள் சென்று சாமியை தரிசிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த கோவிலுக்குள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நுழைய முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கோவிலுக்கு சென்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தடுப்பு வேலிக்கு முன் நின்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.