டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்
1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில், ஹாக்கியில் இந்திய அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், நான்காவது இடத்தை இந்திய பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய மகளிர் அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட நிலையில் , 40 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி கால்இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.