Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக  கொடிகட்டுதல் , பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட பழனி , சுப்பிரமணியன் ,  சங்கர் , லட்சுமிகாந்த் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில வைத்து விசாரித்து வருகின்றனர்.மேலும் நேற்று கைது செய்யபட்ட ஜெயகோபால் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார்.

Categories

Tech |