கும்பம் ராசி அன்பர்களே.! பெண்களுக்கு கையில் காசு பணம் புரளும்.
இன்று தனலாபம் பெருகி மனமகிழ்ச்சி அடையும். புத்திர பாக்கியம் ஏற்படும். தன்னம்பிக்கை கூடுவதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சொன்ன சொல்லை நீங்கள் எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முடிவுகள் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி எட்டிப் பிடிப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை நடக்கும். பெரியாரிடம் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தைரியமான மனநிலையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் வரக்கூடும்.
புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பெண்களுக்கு கையில் காசு பணம் புரளும். காதல் விவகாரங்கள் மட்டும்தான் கொஞ்சம் மன வருத்தத்தை ஏற்படுத்தி தரும். அதனை பக்குவமாக கையாள வேண்டும். மாணவர்கள் மனதை பக்குவமாக வைத்து தெளிவாக நடந்து கொள்ள வேண்டும். மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்