தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கலக்கலான புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சிம்பு திகழ்கிறார். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டு அதன்படி நிறைய படங்களை கைவசமும் வைத்துள்ளார். இந்நிலையில் சிம்பு எப்பவாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இது சிம்புவிற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுக் கொடுக்கிறது. இதனையடுத்து சிம்பு தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.