தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமானவரும் யூடியூபில் அதிக ஃபாலோயர்ஸ்களை பெற்றவருமான ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் ஜி.பி.முத்துவுக்கு ஏறக்குறைய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்கள் குவிந்துள்ளனர். மேலும் ஜி.பி.முத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் மட்டுமில்லாமல் “குக் வித் கோமாளி” தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் நடிக்கும் ஒரு திகில் காமெடி படத்தை சசிகுமார் மற்றும் வீரசக்தி தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்த படத்தில் ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜாவித் இசையமைப்பதாகவும், யுவன் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.