Categories
அரசியல் மாநில செய்திகள்

2021-ல் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் முதல்வர்… கராத்தே தியாகராஜன் உறுதி..!!

2021-ல் ரஜினிகாந்த் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று  தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார்  என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.  

நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் ஏற்கனவே உறுதியாக அறிவித்து விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  இருப்பினும் இன்னும் கட்சியை  ஆரம்பிக்கவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் எப்போது அவர் கட்சியை ஆரம்பிப்பார்  என்ற எதிர்பார்ப்பில் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Image result for Karate Thiagarajan Rajinikanth

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி வெற்றிடத்தை நிரப்பபோவது அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். இன்னும் 6 மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறினார். மேலும் 2021-ல் சட்ட பேரவை தேர்தலில்  மிகப்பெரிய வெற்றியடைந்து தமிழகத்தின் முதலமைச்சர்  ஆவார்  எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |