தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று “அண்ணாத்த” படத்திலிருந்து வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, குஷ்பூ, நயன்தாரா உள்ளிட்டோர் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளனர்.
மேலும் விரைவில் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் “அண்ணாத்த” படத்திற்காக தற்போது நடிகை மீனா தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். மேலும் இயக்குனர் சிவாவுடன் அப்போது எடுத்த புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.