ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம், அதனுடன் மற்ற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது பான் கார்டாக இருந்தாலும் சரி, ஓட்டுநர் உரிமமாக இருந்தாலும் சரி, அதை இணைத்த பின்னரே, அவை தொடர்பான வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். வீட்டில் அமர்ந்து ஆதார் அட்டையுடன், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைத்தல்
1. ஆதார் அட்டையுடன் உரிமத்தை இணைக்க, முதலில் மாநில போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு செல்லவும்.
2. இங்கே ஆதார் இணைப்பைக் கிளிக் செய்த பின், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஓட்டுநர் உரிமத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதைச் செய்த பிறகு, உங்கள் ஓட்டுநர் உரிம எண்ணை உள்ளிட்டு, Get Details என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இந்த செயல்முறையை முடிக்க “submit” என்பதைக் கிளிக் செய்யவும்.
6. இதைச் செய்த பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
7. இப்போது OTP ஐ உள்ளிட்டு உங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் உடன் இணைக்கும் செயல்முறையை முடிக்கவும்.
இதை செய்த பின் உங்கள் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் விபரம் இணைக்கப்பட்டு விடும்.