இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் .
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் ரயிலடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் .இவருடைய தம்பி சுரேஷ் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை தம்பி சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போது ,எதிரே வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த பாலசுப்ரமணியன் வலது கால் முறிந்து ரத்த வெள்ளத்தில் சாலையில்கிடந்தார் . இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சுரேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் கிஷோர் என்பவரை கைது செய்துள்ளனர் .இதில் விபத்தில் உயிரிழந்த சுரேசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது .