வடசென்னை படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி இயக்குனரான அமீர் தற்போது நடித்து வரும் அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி என்னும் புதிய படம் வெளியாவது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இயக்குனர் பட்டியலில் அமீரும் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் வடசென்னை படத்தில் நடித்த ராஜன் என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அமீர் கதாநாயகனாக நடித்த அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி படத்தை வி இசட் துரை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் இந்த படத்தை முழுவதுமாக பட தொகுப்பாக உருவாக்கியுள்ளார். ஆனால் வி இசட் துரை உருவாக்கிய அந்த படத்தொகுப்பு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் அதிருப்தியாக இருந்துள்ளது. இதனால் இயக்குனர் அமீர் அந்தப் படத்தை ஒரு புது விதமாக எடிட் செய்து தயாரிப்பாளரிடம் காண்பித்துள்ளார்.
அது தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்தாலும் கூட இயக்குனர் வி இசட் துரைக்கு மிகுந்த எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தப் படம் வெளியாவது சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.