Categories
உலக செய்திகள்

குடியிருப்பை சுற்றியுள்ள வனப்பகுதி…. வெப்ப அதிகரிப்பினால் நேர்ந்த விளைவு…. இத்தாலியில் புகை மண்டலமாக மாறிய நகரம்….!!

இத்தாலியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை சுற்றியுள்ள வனப் பகுதியில் வெப்ப அதிகரிப்பினால் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சிசிலியின் புறநகர்ப் பகுதியில் கடானியா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த கடானியாவில் வசித்து வரும் பொது மக்களின் குடியிருப்புகளை சுற்றியும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பினால் இந்த வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் தீயினால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு ஏதேனும் ஏற்படாமல் இருக்க அவர்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு ஏற்பட்ட காட்டுத் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது.

Categories

Tech |