ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக தினசரி பத்தாயிரம் பேராவது தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்நாட்டிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசு படைகளை முறியடித்து பெரும்பாலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சியில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.