ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் பூமிகா, மோகன் தாஸ், டிரைவர், ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படமான பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், அபய் தியோல், அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Extremely happy to announce that #Boomika will have its Tamil Premiere on @vijaytelevision Cant wait 4 u all to watch my Eco thriller-horror directed by @RathindranR. @karthiksubbaraj @kaarthekeyens @Sudhans2017 @SureshChandraa @StonebenchFilms #PassionStudios#BoomikaonVijayTV pic.twitter.com/mm020Xnf0h
— aishwarya rajesh (@aishu_dil) July 31, 2021
மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மனநோய் மருத்துவராக நடித்துள்ளார். இந்நிலையில் பூமிகா படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் அதே நாளில் நெட்பிலிக்ஸிலும் இந்த படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.