தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த வித இன்னல்களையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், இரண்டு தவணையாக வழங்கப்பட்டது.
அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கும் பணி மீண்டும் தொடங்கி இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.