Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஒரு மாதத்திற்கு பின்பு வந்தது” கதறி அழுத குடும்பத்தினர்…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

ஒரு மாதத்திற்கு பின்பு வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ராஜேஷ் சாலை விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் ராஜேஷின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் குடும்பத்தினர் அவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இருக்கும் தமிழர் நலச்சங்க தமாம் மண்டல தமிழ் அமைப்பின் செயலாளரான சையது இப்ராஹிம் என்பவர் இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு தனது சொந்த முயற்சியில் ராஜேஷின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த ராஜேஷின் உடலை பார்த்த மனைவி, உறவினர்கள் மற்றும் குழந்தைகள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. அதன்பின் ராஜேஷின் குடும்பத்தினர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்த சவுதி அரேபியாவின் தமாம் மண்டல தமிழ் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |