மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு . வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெங்கட் பிரபுவுக்கும், சுரேஷ் காமாட்சிக்கும் சம்பள விஷயத்தில் தகராறு ஏற்பட்டு மாநாடு பட வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த தகவலை அறிந்த வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எப்பா சாமி… ஏன் ஏன் ஏன்… தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். மாநாடு படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா’ என பதிவிட்டுள்ளார்.