Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்… அதிமுக தலைமை அதிரடி…!!!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக முன்னாள் எம்பி பரசுராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“கழகத்தின் கொள்கை குறிக்கோள் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட காரணத்தினால், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கு. பரசுராமன், ராஜமோகன், பண்டரிநாதன், ஆர் எம் பாஸ்கர், கே அருள்சகாயகுமார் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரசுராமன் திமுகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அதிமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |