மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கொரோனாவினால் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் மொத்தமாகவுள்ள 22 நாடுகளில் 15 நாடுகள் டெல்டா வகை கொரோனாவின் 4 ஆவது அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது சிறிதளவு கட்டுக்குள் வந்துள்ளது.
இருப்பினும் இந்த வகை டெல்டா கொரோனாவினால் அமெரிக்கா போன்ற பிரபல நாடுகள் மிகவும் கடுமையான பாதிப்பை தற்போது சந்தித்து வருகிறது. இவ்வாறான சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களையே தாக்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.