பாண்டியன் ஸ்டோர் சீரியலின் பரபரப்பு புரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த சீரியல் குறித்து சமீபத்தில் வெளியான ப்ரோமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இத்தனை நாட்களாக இந்த சீரியலில் நடித்து வரும் மூர்த்திக்கு தெரியாமல் அவரது தம்பி கண்ணன் ரகசியமாக வைத்திருந்த உண்மை அவருக்கு தெரிய வருகிறது. இந்த பரபரப்பான புரோபோவை கண்ட ரசிகர்கள் அடுத்த எபிசோடை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.