பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லம் பகுதியில் வசிக்கும் கபீர் குட்டி என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியமரம் தோட்டம் பகுதியில் பஞ்சு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த ஜூலை 29 – ஆம் தேதி அன்று இந்த பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் எந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் அனைத்தும் எரிந்து நாசமாயின.