Categories
தேசிய செய்திகள்

“பொருளாதார வீழ்ச்சி”… நாட்டை காப்பாற்ற சிங்கால் மட்டுமே முடியும் – ப சிதம்பரம்.!!

“பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேருவதற்கான  வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர் சிங் தான்” என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான மன்மோகன் சிங் தனது 87-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவரது பிறந்தநாளுக்கு மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image result for Dr Singh.sithambaram

இந்நிலையில்  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் மூலம் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட் செய்துள்லார். அதில், டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழட்டும்! என்று பதிவிட்டுள்ளார். மேலும் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேருவதற்கான  வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர் சிங்  தான் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |