இஞ்சி ஏலக்காய் டீ
தேவையான பொருட்கள்:
பால் – 1 டம்ளர்
சர்க்கரை – தேவையான அளவு
டீ பவுடர் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
ஏலக்காய் – 2
தண்ணீர் – 1/4 டம்ளர்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீத்தூள் , நசுக்கிய ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இறக்கி வடிகட்டி பருகினால் சூப்பரான இஞ்சி ஏலக்காய் டீ தயார்!!!