நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதில் பிளஸ் டூ வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன.
குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையதளம் மூலம் அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.