Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் அனைவருக்கும் 100 டாலர் பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி போடுகிறவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், கொரோனாவுக்கு எதிராக யுத்தம் தொடர்கிறது. புதிய சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |