தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தளர்வுகள் அளித்தால் உடனே மக்கள் கூடி விடுகின்றனர். அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர் என்றார். மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.