நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கிளாப் படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து இவர் ஈரம், ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆகாங்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார் .
.@LahariMusic has acquired the audio rights for #CLAP. Music by none other than the maestro himself #Ilaiyaraaja sir! pic.twitter.com/8yY0WShLXm
— Aadhi🎭 (@AadhiOfficial) July 28, 2021
மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் கிளாப் படத்தின் ஆடியோ உரிமைகளை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.