ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதத்தில் மட்டும் ராஜ்குந்த்ரா ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்து உள்ளார். அவர் இன்னும் அதிக பணம் சம்பாதித்திருக்கலாம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். ராஜ்குந்த்ரா அலுவலகத்தில் இருந்து 9 கோப்புகளை கைப்பற்றி உள்ளோம். அதனை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது என்று தெரிவித்தனர். மேலும் ராஜ்குந்த்ராவை அவரது வீட்டில் விசாரணை செய்துகொண்டிருந்தபோது அவரின் மனைவியும் நடிகையுமான சில்பா செட்டி ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது வரை இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. ஆதாரம் மட்டும் சிக்கினால் அடுத்த நிமிடமே அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.