கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே. இப்படி சித்தர்களின் ஜீவ சமாதிக்கு பௌர்ணமி நாட்களில் சென்று வழிபாடு செய்துவர உங்கள் கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும். உங்கள் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி, மனம் அமைதி பெறும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரித்து தெளிவு பிறக்கும். முடிந்தால் பவுர்ணமி நாளில் கோவில்களில் உள்ள ஜீவசமாதியில் சென்று உறங்கி வரவும். இது எல்லையில்லா நற்பலன்களை அள்ளித் தரும்.