சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! #SarpattaParambaraiOnPrime @beemji @arya_offl 👏
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2021
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது. வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.