Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : கடைசி டி20 போட்டி ….! டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள  பிரேமதாசா மைதானத்தில் இன்று  நடக்கிறது .

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் நேற்றைய போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6  பவுலர்களுடன் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் பேட்ஸ்மேன்கள்  ரன்களை குவிக்க தவறிவிட்டனர் .

அதோடு நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணி பீல்டிங் ,பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியில் நேற்று விடுபட்ட வீரர்கள் இன்று களமிறங்குவார்கள் என தெரிகிறது. அதன்படி பிரித்வி ஷா ,ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இன்று நடைபெறவுள்ள போட்டியில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. எனவே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே  தொடரை கைப்பற்றும் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |