உலக அளவில் கடந்த வாரம் கொரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிலையம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகள் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 19 கோடி 56 லட்சத்தை தாண்டியது. இதே ரீதியில் சென்றால் இன்னும் 2 வாரத்தில் 20 கோடியை மிஞ்சிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாக இருக்கிறது.