Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்-2’ வில்லன் அதீராவின் மிரட்டலான போஸ்டர்… ரசிகர்கள் அதிருப்தி…!!!

நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எப்-2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் கே.ஜி.எப்-2 படம் ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

https://twitter.com/prashanth_neel/status/1420602502903341056

மேலும் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கே.ஜி.எப்-2 படத்தில் அதீரா என்ற கொடூர வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Categories

Tech |