சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . நெல்சன் திலிப்குமர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டது.
As you're getting your vaccination shots done. Get ready for your laughter shot! #DoctorUpdate coming up in a few days… *slow dance begins*#Doctor
— KJR Studios (@kjr_studios) July 28, 2021
இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘இன்னும் சில நாட்களில் டாக்டர் படத்தின் அப்டேட் வெளியாகும். எல்லோரும் சிரிக்க தயாராகுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், டான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.