தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் சேர்க்க பணம் இல்லாமல் ஒரு சில பெற்றோர் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகள் சேர்க்க வருகின்றனர். இவ்வாறு தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும், அரசு பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்களை அதிகளவில் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.