Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இந்த போன்ல இந்த அறிகுறி இருக்கா…? உடனே செக் பண்ணுங்க… ஹேக்கர்கள் வேலையாக இருக்கும்…!!!

இன்றைய சூழலில் மொபைல் போன் ஹேக் செய்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நமது செல்போனை ஹேக் செய்வதால் நமது செல்போனில் உள்ள முக்கிய ஆவணங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடும். இப்படி நமது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாம் சில விஷயங்களை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். உங்களின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அல்லது வேவு பார்க்கப் பட்டிருந்தாலும் சில அறிகுறிகள் அதை காட்டிக்கொடுக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்

அது எப்படி என்றால், நீங்கள் பயன்படுத்தாத போது செல்போன் அதிக சூடாகிறது என்றால் உங்களது செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நீங்கள் மேற்கொள்ளாத அழைப்பு, அனுப்பாத மெசேஜ்கள் ஆகியவை உங்கள் செல்போனில் காணப்படும், அவையும் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியே. நீங்கள் எடுக்காத புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் செல்போன் கேலரியில் இருக்கும். அப்போது உங்கள் செல்போன் கேமரா வேறு ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம்.

வழக்கத்தைவிட உங்களது மொபைல் போனின் பேட்டரி வேகமாக தீரும். நீங்கள் டவுன்லோட் செய்யாத செயலிகளை உங்கள் போனில் இருக்கும். அப்படி இருந்தால் உங்கள் போனில் ஹேக்கர்களின் வேலை செய்துள்ளார்கள் என்று அர்த்தம். மொபைல் போனின் இன்டர்நெட் வேகமாக தீர்ந்துவிடும். வித்தியாசமாக இருக்கும். வழக்கமான வெப்சைட்டுகள் வித்தியாசமாக தோன்றும். நீங்கள் டவுன்லோட் செய்யாத ஆப்புகள் திடீரென்று தோன்றும்.

பின்னர் அந்த ஆப்புகள் திடீரென்று செயலிழந்துவிடும். இது போன்ற அறிகுறிகள் காணப்படும் பொழுது எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் போனை பயன்படுத்தாத நேரத்தில் கூட டார்ச்லைட் தானாக எரியும். இதுபோன்ற அறிகுறிகள் உங்கள் போனில் காணப்பட்டால் உஷார் ஆகி விடுங்கள். உடனே உங்கள் செல் போனை ரீசெட் செய்யுங்கள். அப்படி செய்தால் உங்கள் போனுக்குள் ஊடுருவிய மென்பொருள்கள் அழிந்துவிடும்.

Categories

Tech |